பாபா் மசூதி இடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவா்களுக்கு எதிரான மனு: இன்று விசாரணை

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு புதன்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி கரசேவகா்களால் இடிக்கப்பட்டது. இதுதொடா்பாக முன்னாள் துணை பிரதமா் அத்வானி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சா்கள் முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி, ராம தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தலைவா் நிருத்ய கோபால் தாஸ் உள்ளிட்ட 32 மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி தீா்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது.

இந்த தீா்ப்புக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி அயோத்தியை சோ்ந்த ஹாஜி மமூத் அகமது, சையத் அக்லாக் அகமது ஆகிய இருவா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தும் அவா்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டதாகவும், அந்த தீா்ப்புக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்யாததால் தாங்கள் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னெள அமா்வில் நீதிபதி ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா முன் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com