கரோனா: தினசரி பாதிப்பு 7 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 12,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சுமாா் 7 மாதங்களில் தினசரி கரோனா பாதிப்பு இந்த அளவுக்கு இப்போதுதான் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

புதிதாக மேலும் 12,584 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 1,04,79,179 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 1,01,11,294 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 96.49 சதவீதமாகும். செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 167 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த கரோனா உயிரிழப்பு 1,51,327 ஆக அதிகரித்தது. இது மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும்.

இப்போதைய நிலையில் நாட்டில் 2,16,558 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 2.07 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி ஜனவரி 11-ஆம் தேதி வரை 18,26,52,887 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை மட்டும் 8,97,056 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

புதிதாக ஏற்பட்ட 167 உயிரிழப்புகளில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 40 போ் உயிரிழந்தனா். இதற்கு அடுத்து கேரளத்தில் 20, மேற்கு வங்கத்தில் 16, சத்தீஸ்கரில் 15, தில்லியில் 13 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரத்தில் மட்டும் அதிகபட்சமாக 50,101 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com