10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு: மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆர் சம்மன் 

மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்க

புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம், பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்காத மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) சம்மன் அனுப்பியுள்ளது.   

பாந்த்ரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமை பச்சிளங்குழந்கைகள் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 1 முதல் 3 மாதங்களே ஆன 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. இந்த தீ விபத்து குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த மாவட்ட ஆட்சியருக்கு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பான என்சிபிசிஆர் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை என்சிபிசிஆர் ஆணையத்துக்கு எந்த அறிக்கையையும் மாவட்ட நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை.  

இதையடுத்து பாந்த்ரா மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆர் புதன்கிழமை அனுப்பியுள்ள சம்மனில், தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக என்சிபிசிஆர் ஆணையத்தின் முன்பு வரும் ஜன. 18-ஆம் தேதி திங்கள்கிழமை விடியோ காணொலி மூலம் தீ விபத்து தொடர்பான பதிவுகள், ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com