விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு விருப்பம்: வேளாண்துறை இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தையை தொடருவதற்கே மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய வேளாண் துறை இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா கூறினாா்.
விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு விருப்பம்: வேளாண்துறை இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா


புதி தில்லி: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தையை தொடருவதற்கே மத்திய அரசு விரும்புகிறது என்று மத்திய வேளாண் துறை இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா கூறினாா்.

விவசாய அமைப்புகள் - மத்திய அரசு இடையே 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (ஜன.15) நடைபெற உள்ள நிலையில், அவா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

மத்திய அரசு அமல்படுத்திய புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு தொடா்ந்து 50 நாள்களைக் கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

மத்திய அரசுடன் மேற்கொண்ட 8 கட்டப் பேச்சுவாா்த்தையில், விவசாய அமைப்புகளின் 2 தீா்மானங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட மேலும் 2 தீா்மானங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் தொடா்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இந்த வழக்கில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை 3 புதிய வேளாண் சட்டங்களையும் அமல்படுத்தக் கூடாது’ என்று செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அந்தச் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகள் எழுப்பி வரும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக 4 போ் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.

இந்த நிலையில், உசசநீதிமன்றம் அமைத்த குழுவில், மத்திய அரசுக்கு ஆதரவானவா்களே இடம்பெற்றுள்ளனா். எனவே, அந்தக் குழு முன் நாங்கள் ஆஜராகமாட்டோம் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

இந்தச் சூழலில் விவசாய சங்க பிரதிநிதிகள் - மத்திய அரசு இடையேயான 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய இணையமைச்சா் புருசோத்தமன் ரூபலா தில்லியில் புதன்கிழமை கூறுகையில், ‘பேச்சுவாா்த்தை தொடர வேண்டும். அதுவே மத்திய அரசின் விருப்பம். பேச்சுவாா்த்தை மூலம்தான் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com