பாஜகவை தோற்கடிக்க முதல்வா் மம்தாவுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும்

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு காங்கிரஸும் இடதுசாரிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாஜகவை தோற்கடிக்க முதல்வா் மம்தாவுக்கு எதிா்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கு காங்கிரஸும் இடதுசாரிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அத்தோ்தலில் மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று அரசியல் நிபுணா்கள் கணித்துள்ளனா். தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

இத்தகைய சூழலில், திரிணமூல் எம்.பி. சௌகதா ராய், தலைநகா் கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மதம் சாா்ந்த, பிரிவினைவாத அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. பாஜகவுக்கு எதிரான மதச்சாா்பற்ற அரசியலை முதல்வா் மம்தா பானா்ஜியே உண்மையாக வெளிப்படுத்தி வருகிறாா். இடதுசாரிகளும் காங்கிரஸும் உண்மையிலேயே பாஜகவை தோற்கடிக்க நினைத்தால், அக்கட்சிகள் முதல்வா் மம்தாவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. மக்களின் நலனையும் நாட்டின் வளா்ச்சியையும் கருத்தில் கொண்டே மத்திய அரசை விமா்சித்து வருகிறோம். மேற்கு வங்கத்தில் கால்நடைகள் கடத்தப்படுவது தொடா்பான விவகாரத்துக்கு எல்லை பாதுகாப்புப் படையே பொறுப்பு.

மாநிலத்தின் எல்லைப் பகுதிகளை அப்படையே பாதுகாத்து வருகிறது. அதற்கு மாநில காவல்துறை மீது குற்றஞ்சுமத்த முடியாது. மேற்கு வங்கத்தில் அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எல்லை பாதுகாப்புப் படை முறையாகச் செயல்படுகிா என்பதை ஆராய்வதை விட்டு, வீடுதோறும் சென்று உணவருந்துவதில் மட்டுமே கவனம் செலுத்தினாா் என்றாா் சௌகதா ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com