தமிழில் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி

பொங்கல் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பொங்கல் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தமிழில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளில், ஏராளமான மக்கள் புதுப்பானையில் மஞ்சள் குங்குமமிட்டு பச்சரிசி பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். 

பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது சுட்டுரைப் பதிவில், “தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.” எனப் பதிவிட்டு அவர் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com