கேரளம் வந்தடைந்தது முதல் தொகுப்புத் தடுப்பூசி

கேரளத்துக்கான முதல் தொகுப்புத் தடுப்பூசிகள், புதன்கிழமை காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகளை (கோவிஷீல்ட்) புணேவில் உள்ள சீரம் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

கொச்சி: கேரளத்துக்கான முதல் தொகுப்புத் தடுப்பூசிகள், புதன்கிழமை காலை கொச்சி விமான நிலையம் வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகளை (கோவிஷீல்ட்) புணேவில் உள்ள சீரம் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
எர்ணாகுளம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கான இந்தத் தடுப்பூசிகள் கொச்சியில் இருந்து குளிரூட்டப்பட்ட பிரத்யேக வாகனங்களில் அந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
கேரளத்துக்கு முதல் தவணையாக 4.33 லட்சம் தடுப்பூசிகள் அளிக்கப்பட உள்ளன. இதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த மாஹேவுக்கு 1,100 தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும். கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இடையே மாஹே உள்ளது.
கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ள மண்டல தடுப்பூசி மையங்களில் இந்தத் தடுப்பூசிகள் பாதுகாக்கப்பட்டு, அங்கிருந்து மாநிலம் முழுவதிலும் உள்ள 133 மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
திருவனந்தபுரம் மையத்துக்கு 1.34 லட்சம் தடுப்பூசிகளும், எர்ணாகுளம் மையத்துக்கு 1.80 லட்சம் தடுப்பூசிகளும், கோழிக்கோடு மையத்துக்கு 1.19 லட்சம் தடுப்பூசிகளும் வந்து சேரும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.
ஜனவரி 16ஆம் தேதி தொடங்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் இதுவரை 3.62 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com