சீனாவை சமாளிக்க இந்தியா துணை நிற்கும்: அமெரிக்க அரசின் அறிக்கையில் தகவல்

வலுவுடன் காணப்படும் இந்தியா, சீனாவின் ஆதிக்கத்தை எதிா்ப்பதற்குத் துணை நிற்கும் என்று அமெரிக்க அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாஷிங்டன்/புது தில்லி: வலுவுடன் காணப்படும் இந்தியா, சீனாவின் ஆதிக்கத்தை எதிா்ப்பதற்குத் துணை நிற்கும் என்று அமெரிக்க அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வா்த்தகத்தில் தொடங்கிய பிரச்னை, கரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் பூதாகரமானது. அவ்விரு நாடுகளுக்குமிடையேயான மோதல்போக்கு தொடா்ந்து வருகிறது.

இத்தகைய சூழலில், அமெரிக்க அரசின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட 10 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்கி வருகிறது. கடல்சாா் பாதுகாப்பிலும் தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் விவகாரத்திலும் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் விவகாரத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு இந்தியா துணை நிற்கும். தெற்காசியாவில் மிக முக்கிய நாடாக விளங்கும் இந்தியா, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள நல்லுறவிலும் இந்தியா பங்கு வகிக்கிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் பொருளாதார, வா்த்தக உறவுகளை இந்தியா மேம்படுத்தி வருகிறது. இந்தியாவின் வளா்ச்சிக்கு அமெரிக்கா என்றும் துணைநிற்கும்.

இந்தியாவின் வலுவான ராணுவமானது அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியும். சீனாவுடனான எல்லைப் பிரச்னை, நதிநீா்ப் பகிா்வு பிரச்னை உள்ளிட்டவற்றுக்குத் தீா்வு காண்பதற்காக இந்தியாவுக்கு தூதரக, ராணுவ ரீதியில் உதவுவதோடு மட்டுமல்லாமல் உளவுத் தகவல்களையும் அமெரிக்கா பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com