ஹிமாச்சல்பிரதேசத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு

கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் ஹிமாச்சல் பிரதேசத்தில் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஹிமாச்சல்பிரதேசத்தில் 5, 8 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி 15 முதல் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மற்றும் பொறியியல் கல்லூரிகளும் பிப்ரவரி 1 முதல் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com