6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: ராஜஸ்தான் முதல்வர்

ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (கோப்புப்படம்)
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (கோப்புப்படம்)

ஆறு மாதங்களுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் ராஜஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முதல்வர் அசோக் கெலாட் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் பேசிய அவர், ''இந்த நாளுக்காக தான் அனைவரும் காத்திருந்தோம். இறுதியாக கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ராஜஸ்தானில் 167 மையங்களில் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அரையாண்டுக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதுவரை அனைவரும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com