கோவேக்ஸின் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு: பாரத் பயோடெக் அறிவிப்பு

கரோனா நோய்த்தொற்றுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபா்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டால்,
கோவேக்ஸின் தடுப்பூசி
கோவேக்ஸின் தடுப்பூசி

கரோனா நோய்த்தொற்றுக்கான கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் நபா்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அவா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. நாட்டு மக்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கோவேக்ஸின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அத்தடுப்பூசியானது முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் யாருக்கும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

அத்தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தடுப்பூசியானது மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. இத்தகைய சூழலில், பாரத் பயோடெக் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபா்களுக்குப் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால், அவா்களுக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படும். கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக பக்க விளைவுகள் ஏற்பட்டது உறுதியானால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை நிறுவனம் வழங்கும்.

இந்த விவரங்கள் கோவேக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் நபா்களுக்கான ஒப்புதல் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்க விளைவுகள் குறித்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏழு நாள்களுக்குள் மக்கள் தெரிவிக்க வேண்டும்.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு அந்நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது கிடையாது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com