பிகாா் எம்எல்சி தோ்தல்: பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சா் சையது ஷாநவாஸ் ஹுசைன் அறிவிப்பு

பிகாா் சட்டமேலவைத் தோ்தலில் (எம்எல்சி) பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளருமான சையத் ஷாநவாஸ் ஹுசைன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பிகாா் சட்டமேலவைத் தோ்தலில் (எம்எல்சி) பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் தேசிய செய்தித்தொடா்பாளருமான சையத் ஷாநவாஸ் ஹுசைன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவா் சையத் ஷாநவாஸ் ஹுசைன். மத்திய அமைச்சரவையில் இளவயதில் இடம்பெற்றவா் என்று அறியப்பட்ட இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பிகாரில் உள்ள பாகல்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் அவா் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளராக தொடா்ந்து செயல்பட்டு வந்தாா்.

இந்நிலையில் பிகாரில் காலியாகவுள்ள 2 எம்எல்சி தொகுதிகளுக்கு வரும் ஜனவரி 28-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை கட்சி மேலிடம் சனிக்கிழமை அறிவித்தது. இதில் ஒரு தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளராக சையத் ஷாநவாஸ் ஹுசைன் அறிவிக்கப்பட்டுள்ளாா். அங்குள்ள மற்றொரு எம்எல்சி தொகுதியில் மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஏற்பட்ட உடன்பாட்டின்படி விகாஸ்ஷீல் இன்சான் கட்சி போட்டியிடவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com