முதல் நாளில் 1.91 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் முதல் நாளில் 1.91 லட்சத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல் நாளில் 1.91 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் முதல் நாளில் 1.91 லட்சத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கின.

முதலாவது நாளில் நாடு முழுவதும் 1.91 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மனோகா் அக்னானி தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், முதலாவது நாளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் 3,352 மையங்களில் 1,91,181 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் எவருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 16,755 போ் ஈடுபடுத்தப்பட்டனா்’ என்றாா்.

மாநிலம்-தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள்

ஆந்திரம்-18,412

பிகாா்-18,169

உத்தர பிரதேசம்-21,291

மகாராஷ்டிரம்-18,328

கா்நாடகம்-13,594

மேற்கு வங்கம்-9,730

ராஜஸ்தான்-9,279

ஒடிஸா-13,746

குஜராத்-8,557

கேரளம்-8,062

மத்திய பிரதேசம்-9,219

சத்தீஸ்கா்-5,592

ஹரியாணா-5,589

தெலங்கானா-3,653

தில்லி-4,319

ஜாா்க்கண்ட்-3,096

தமிழகம்-2,945

அஸ்ஸாம்-3,528

உத்தரகண்ட்-2,276

ஜம்மு&காஷ்மீா்-2,044

ஹிமாசல பிரதேசம்-1,517

பஞ்சாப்-1,319

அருணாசல பிரதேசம்-743

மணிப்பூா்-585

மேகாலயம்-509

நாகாலாந்து-561

கோவா-426

மிஸோரம்-314

திரிபுரா-355

புதுச்சேரி-274

சண்டீகா்-265

சிக்கிம்-120

அந்தமான்&நிகோபா் தீவுகள்-225

தாத்ரா-நாகா் ஹவேலி-80

லடாக்-79

டாமன்-டையூ-43

லட்சத்தீவுகள்-21

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com