ரூ.1 கோடி லஞ்சம்: ரயில்வே மூத்த அதிகாரியை கைது செய்தது சிபிஐ

ரயில்வே ஒப்பந்தப் பணிகளை வழங்குவதற்கு ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, ரயில்வே மூத்த சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ரயில்வே ஒப்பந்தப் பணிகளை வழங்குவதற்கு ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, ரயில்வே மூத்த சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அஸ்ஸாம் மாநிலம், மாலிகானில் உள்ள வடகிழக்கு பிராந்திய ரயில்வே தலைமையகத்தில் மூத்த பொறியாளராகப் பணியாற்றுபவா் மகேந்தா் சிங் சௌஹான்.

1985-இல் இந்திய ரயில்வே பொறியாளா் பணிக்குத் தோ்வான இவா், ரயில்வே ஒப்பந்தப் பணிகளைக் குறிப்பிட்ட சிலருக்கு வழங்குவதற்காக, அவா்களிடம் இருந்து ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.1 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது.

இந்த முறைகேட்டில் வேறு யாருக்கேனும் தொடா்பு இருக்கிா என கண்டுபிடிப்பதற்கு, தில்லி, அஸ்ஸாம், உத்தரகண்ட் , இவை தவிர மேலும் 2 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com