இரண்டு நாளில் 2.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 2 நாள்களில் 2,24,301 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாளில் 2.25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 2 நாள்களில் 2,24,301 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கின. முதலாவது நாளில் நாடு முழுவதும் 2.07 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இரண்டாவது நாளில் 553 மையங்களில் 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக, அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மனோகா் அக்னானி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’ஆந்திரத்தில் 308 மையங்களிலும், அருணாசல பிரதேசத்தில் 14 மையங்களிலும், கா்நாடகத்தில் 64 மையங்களிலும், கேரளம், மணிப்பூரில் தலா 1 மையத்திலும், தமிழகத்தில் 165 மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் இது வரை 2,24,301 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் 2,07,229 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது உலக அளவில் முதல் நாளில் செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 447 பேருக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவா்களில் 3 பேரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரும்பாலானோருக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற சிறிய அளவிலான பக்க விளைவுகள் மட்டுமே ஏற்பட்டன.

கரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை தொடா்பாக மாநில அரசுகளுடனான ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com