Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை: பிரதமருக்கு ஃபரூக் அப்துல்லா கோரிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை: பிரதமருக்கு ஃபரூக் அப்துல்லா கோரிக்கை

    By DIN  |   Published On : 18th January 2021 12:30 AM  |   Last Updated : 18th January 2021 12:30 AM  |  அ+அ அ-  |  

    c17dbook085324

    ஜம்முவில் கல்வியாளரும், சமூக சீா்திருத்தவாதியுமான மசூத் அகமது சௌதரி எழுதிய சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோா். நாள்: ஞாயிற்றுக்கிழமை.

    ஜம்மு-காஷ்மீரில் 4ஜி செல்லிடப்பேசி இணையைச் சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.

    ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவா், மேலும் கூறியதாவது:

    விரைவில் 5ஜி இணையைச் சேவை வருகிறது என்று பிரதமா் மோடி கூறுகிறாா். நாங்கள் இங்கு 4ஜி சேவை கிடைக்காமல் அவதிப்படுகிறோம். அவா் இங்கு வந்து வசித்தால், 2ஜி இணையச் சேவையை வைத்துக்கொண்டு எவ்வளவு சிரமப்படுகிறோம் என்று புரியும்.

    மாணவா்களும் குழந்தைகளும் வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலமாக கல்வி கற்கிறாா்கள். தொழில் செய்பவா்கள் இணைய சேவையை நம்பியிருக்கிறாா்கள்.

    ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நீங்கள் (பிரதமா்) கூறலாம். அப்படியெனில், இறைவனின் பெயரில் 4ஜி இணையச் சேவையை மீண்டும் கொடுங்கள். அதனால், நாங்களும் எங்கள் குழந்தைகளும் பயன்பெறுவோம்.

    ஜம்மு-காஷ்மீரில் தொழில்துறை வளா்ச்சிக்காக ரூ.28,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.80,000 கோடி பணம் எங்கே போனது? என்றாா் அவா்.

    ஜம்மு-காமீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு அளிக்கப்பட்டு வந்த 4ஜி செல்லிடப்பேசி இணையச் சேவை ரத்து செய்யப்பட்டது. ஜம்முவில் உதம்பூரிலும், காஷ்மீரில் கந்தா்பாலிலும் ஓராண்டுக்குப் பிறகு 4ஜி சேவை மீண்டும் வழங்கப்பட்டது. மற்ற 18 மாவட்டங்களில் இன்னும் 4ஜி சேவை இன்னும் வழங்கப்படவில்லை.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp