அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனக் கட்டுமானம்: ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் பாஜக எம்.பி.

அருணாச்சல் பிரதேசத்தின் எல்லையில் சீன ராணுவம் எழுப்பியுள்ள கட்டுமானத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே காரணம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தபீர் காவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா சீனா இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் சீன நாட்டுடனான அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் புதிய கட்டுமானத்தை சீனா உருவாக்கியுள்ளது. சுபன் மாவட்டத்தின் சாரி சூ நதிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தபீர் காவ் சீனக் கட்டுமானத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே காரணம் எனத் தெரிவித்துள்ளார். 

1980களில் இருந்து இந்தப் பகுதியில் சீனா சாலைகளை அமைத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் ராஜீவ் காந்தி ஆட்சியில் சீனா தவாங்கில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது எனத் தெரிவித்தார்.

“கிராமங்களை நிர்மாணிப்பது ஒரு புதிய விஷயம் அல்ல என்றும் ஏற்கெனவே இந்திய எல்லைக்குட்பட்ட பிசா மற்றும் மாஸா பகுதிகள் இடையே சீனா இராணுவ தளத்தை எழுப்பியிள்ளதாக காவ் தெரிவித்துள்ளார்.

மேலும் சீன ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் தபீர் காவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com