ஜன.30-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மோடி அழைப்பு

ஜனவரி 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


புதுதில்லி: ஜனவரி 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. கரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை விதிமுறைகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது மாா்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறாா். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்துக்கு முன்பாக வரும் 30 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திரே மோடி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்துக்கு மோடி தலைமை தாங்குகிறார். கூட்டமான காணொலி மூலம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதல்கட்டமாக 15 ஆம் தேதி வரையிலும், 2 ஆம் கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும் எனவும், கரோனா கட்டுப்பாடுகளால் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com