ஆக்ரா அருகே முகலாயர் கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு

முகலாயர் காலத்து 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் தண்ணீர் தொட்டியை ஆக்ரா அருகே ஃபதேஹ்புர் சிக்ரியில் இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தாஜ் மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு இல்லை
தாஜ் மகால் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் திறப்பு இல்லை


ஆக்ரா: முகலாயர் காலத்து 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் தண்ணீர் தொட்டியை ஆக்ரா அருகே ஃபதேஹ்புர் சிக்ரியில் இந்திய தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

தொல்லியல் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் தோடர்மல் பராதாரி கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகே ஆய்வுப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது இந்த தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாராதரி என்பது காற்றோட்டம் அதிகமாக வருவதற்கு ஏற்ப 12 கதவுகளைக் கொண்ட ஒரு கட்டட அமைப்பாகும்.

இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா பகுதி கண்காணிப்பாளர் வசந்த் ஸ்வரங்கர் கூறுகையில், தொல்லியல் ஆய்வின் போது, ஒரு சதுர வடிவிலான தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதன் கூரைப் பகுதி சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. தண்ணீர்தொட்டியின் சுவர் பகுதிகளும் சுண்ணாம்பு பூச்சால் மூடப்பட்டுள்ளது. பாராதரி கட்டப்பட்டபோதே, இந்த தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாராதரி மற்றும் தற்போது தண்ணீர் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இப்பகுதியல் மேலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com