ஆந்திரத்தில் மீண்டும் மர்ம நோய்: 22 பேருக்கு பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் எலுரு கிராமத்துக்கு அருகே உள்ள மற்றொரு கிராமத்தில் மர்ம நோயால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரத்தில் மீண்டும் மர்ம நோய்: 22 பேருக்கு பாதிப்பு
ஆந்திரத்தில் மீண்டும் மர்ம நோய்: 22 பேருக்கு பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் ஏலூரு கிராமத்துக்கு அருகே உள்ள மற்றொரு கிராமத்தில் மர்ம நோயால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபததில் ஏலூரு கிராமத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதைப் போன்றே, இந்த கிராமத்திலும் வியாழக்கிழமை இரவு வரை 22 பேருக்கு உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம் தெண்டுலுரு மண்டலத்தில் கோமரப்பள்ளி கிராமத்தில் திடீரென 22 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர்களுக்கு சமீபத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் போன்றே உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது.  சிலர் ஏலூரு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக தெண்டுலுரு எம்எல்ஏ, மேற்கு கோதாவரி ஆட்சியர் ரெவு முத்தியலா ராஜூ உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு விரைந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் திடீா் உடல்நலக்குறைவால் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

உடல்நலக்குறைவு ஏற்பட்டவா்கள், குறிப்பாக சிறாா்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டன. சிலா் மயக்கமடைந்தனா். முதல் கட்ட சிகிச்சை பெற்றவுடன் இயல்புநிலைக்குத் திரும்பிய 140 போ் உடனடியாக வீடு திரும்பினா். கவலைக்கிடமான நிலையில் இருந்த 7 போ் விஜயவாடா அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com