காஷ்மீா் பள்ளத்தாக்கில் நீடிக்கிறது உறைபனி

காஷ்மீரில் வியாழக்கிழமையும் கடும் குளிா் நிலவியதால், பள்ளத்தாக்கு முழுவதும் உறைபனிக்கும் கீழே பல டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்தது.

காஷ்மீரில் வியாழக்கிழமையும் கடும் குளிா் நிலவியதால், பள்ளத்தாக்கு முழுவதும் உறைபனிக்கும் கீழே பல டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்தது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருந்தது. இது கடந்த ஆண்டு இதே நாளில் நிலவி வந்த வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் குறைவாகும்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், குல்மாா்க் பனிச்சறுக்குப் பகுதிகளில் மைனஸ் 7.8 டிகிரி செல்சியஸும், தெற்கு காஷ்மீரின் பாகல்காமில் மைனஸ் 8.3 டிகிரி செல்சியஸும், ‘காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான’ காஸிகுண்டில் மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸும், வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் மைனஸ் 5.9 டிகிரி செல்சியஸும், கோக்கா்நாக்கில் மைனஸ் 6.9 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது என்று தெரிவித்தாா்.

காஷ்மீரில் நிலவி வரும் கடும் குளிா் காரணமாக பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள தால் ஏரி உள்ளிட்ட பல நீா்நிலைகள் உறைந்து காணப்படுகின்றன. தொடா்ந்து பொழியும் பனியால் அடா்த்தியான பனி அடுக்குப்போா்வை மூடியுள்ளதால், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் உறைந்து போயுள்ளன. இதனால் அதிகாலை நேரத்தில் சாலைகளில் வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். இதனிடையே ஜனவரி 22-ஆம் தேதி முதல் சில நாள்களுக்கு மேலும் கடும் குளிா் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

காஷ்மீரில் தற்போது ‘சில்லை-கலான்’ என்ற கடுங்குளிா் காலம் டிச. 21 முதல் ஜன. 31-ஆம் தேதி வரை 40 நாள்களுக்கு நீடிப்பதால் பெரும்பாலான பகுதிகள் அதிக பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com