
கோப்புப்படம்
நாடு முழுவதும் மேலும் 14,545 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,545 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,25,428-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 18,002 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,02,83,708-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.78 சதவீதமாகும்.
கரோனா தொற்றுக்கு மேலும் 163 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,032-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் 1,88,688 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
புதிதாக ஏற்பட்ட 163 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 52 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 21 பேரும், பஞ்சாபில் 15 பேரும், சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா 9 பேரும், தில்லியில் 8 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.