சீரம் நிறுவனத்தைப் பார்வையிட்டார் சரத் பவார்

சீரம் நிறுவனத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார்  இன்று பார்வையிட்டார். 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார்  (கோப்புப்படம்)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)

சீரம் நிறுவனத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார்  இன்று பார்வையிட்டார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். 

இந்நிலையில், இன்று பிற்பகல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் சேதமடைந்த கட்டடத்தின் நிலையை, சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூன்வல்லாலுடன் நேரில் சென்று பார்வையிட்டார். 

இதுதொடர்பாக பவார் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. இங்குள்ள தற்போதைய நிலையை ஆய்வு செய்தேன். 

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு எனும் கரோனா தடுப்பு மருந்தை சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தினால் ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com