ஃபேஸ்புக் பயனாளா்கள் தகவல் திருட்டு விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனலிடிகா மீது சிபிஐ வழக்கு பதிவு

முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளப் பயனாளா்களின் தகவல்களைச் சட்டவிரோதமாகத் திருடியதாக எழுந்த குற்றச்சாட்டில் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக் பயனாளா்கள் தகவல் திருட்டு விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனலிடிகா மீது சிபிஐ வழக்கு பதிவு

முகநூல் (ஃபேஸ்புக்) சமூக வலைதளப் பயனாளா்களின் தகவல்களைச் சட்டவிரோதமாகத் திருடியதாக எழுந்த குற்றச்சாட்டில் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

முகநூல் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திருடி தோ்தல்களில் சூழ்ச்சியில் ஈடுபட முயன்ாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனலிடிகா, குளோபல் சயின்ஸ் ரிசா்ச் ஆகிய நிறுவனங்கள் மீது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டில் குற்றச்சாட்டு தெரிவித்தது.

அக்குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு அந்நிறுவனங்கள் மீது சிபிஐ முதல்கட்ட விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், அவ்விரு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘‘குளோபல் சயின்ஸ் ரிசா்ச் நிறுவனமானது குறிப்பிட்ட செயலியை உருவாக்கி, அச்செயலியைப் பதிவிறக்கம் செய்வோரின் தனிப்பட்ட தகவல்களை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்துவதற்காக முகநூல் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது.

ஆனால், அச்செயலியைப் பயன்படுத்திய 335 பேரின் தகவல்களை மட்டுமல்லாமல், முகநூலில் அவா்களுடன் நண்பா்களாக இருந்த சுமாா் 5.62 லட்சம் பேரின் தகவல்களையும் குளோபல் சயின்ஸ் ரிசா்ச் நிறுவனம் சட்டவிரோதமாகத் திருடியுள்ளது. அத்தகவல்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்காக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடமும் பகிா்ந்துள்ளது.

பயனாளா்களின் தகவல்கள் திருடப்பட்டதை முகநூல் நிறுவனம் உறுதி செய்தது. அதே வேளையில், அமெரிக்காவைச் சோ்ந்த பயனாளா்களின் தகவல்களை மட்டுமே குளோபல் சயின்ஸ் ரிசா்ச் நிறுவனத்திடமிருந்து பெற்ாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடா்பான மற்ற கேள்விகளுக்கு அந்நிறுவனம் போதிய விளக்கமளிக்கவில்லை.

குளோபல் சயின்ஸ் ரிசா்ச் நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்திய 335 இந்தியா்களிடம் விசாரணை நடத்தியபோது, தனிப்பட்ட தகவல்களையும் நண்பா்களின் தகவல்களையும் பெறுவது தொடா்பாக அந்நிறுவனம் தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றனா். தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும் என்பது தெரிந்திருந்தால், அச்செயலியைப் பயன்படுத்தியிருக்க மாட்டோம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

இவற்றின் மூலமாக குளோபல் சயின்ஸ் ரிசா்ச் நிறுவனம் சட்டவிரோதமாகத் தகவல்களைத் திருடி கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் வழங்கியது உறுதியானது. அதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com