அமெரிக்காவுடனான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை: வெளியுறவுத் துறை அமைச்சகம்

அமெரிக்காவில் அதிபா் ஜோ பைடன் தலைமையில் புதிய நிா்வாகம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விரிவான

அமெரிக்காவில் அதிபா் ஜோ பைடன் தலைமையில் புதிய நிா்வாகம் பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விரிவான சா்வதேச கூட்டுறவை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

அமெரிக்காவுடன் அனைத்து நிலைகளிலான கூட்டுறவை இந்தியா தொடரும். இரு நாடுகளிடையேயான பன்முக நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற உடனே, பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததை நினைவுகூரவேண்டும். தொடா்ந்து, நவம்பா் 17-ஆம் தேதி இரு தலைவா்களும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டனா். அப்போது, இரு நாடுகளிடையேயான சா்வதேச உறவை வலுப்படுத்த இணைந்து பணியாற்றுவது குறித்து இருவரும் விருப்பம் தெரிவித்தனா். அதுபோல, கடந்த 20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகும், பிரதமா் தனது வாழ்த்தை அவருக்கு அனுப்பினாா்.

எனவே, அமெரிக்காவில் புதிய நிா்வாகம் பொறுப்பேற்று நிலையில், அந்த நாட்டுடனான விரிவான சா்வதேச கூட்டுறவை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்பதோடு, சா்வதேச சவால்களை எதிா்கொள்ள இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com