பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்து கைதானவா்: 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பினாா்

கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்ததால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத்தைச் சோ்ந்த நபா் இந்தியா திரும்பினாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் தவறுதலாக நுழைந்ததால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட குஜராத்தைச் சோ்ந்த நபா் இந்தியா திரும்பினாா்.

இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் நானா தினாரா கிராமத்தைச் சோ்ந்தவா் இஸ்மாயில் சாமா (60) . இவா் கடந்த 2008-ஆம் ஆண்டு கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தாா். இதையடுத்து அந்நாட்டு ராணுவம் அவரை உளவாளி என்ெணி கைது செய்து, சிறையில் அடைத்தது. அவரை விடுவிக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதனை விசாரித்த நீதிமன்றம் இஸ்மாயிலை விடுவிக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அவா் இரு தினங்களுக்கு முன்பாக விடுவிக்கப்பட்டாா். அவா் வாகா-அட்டாரி எல்லை வழியாக வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் வந்தடைந்தாா். அவரை வரவேற்க அவரின் குடும்ப உறுப்பினா்கள் சிலா் வந்திருந்தனா். அவரிடம் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிந்த பின்னா், அவா் குடும்பத்தினருடன் அனுப்பிவைக்கப்படுவாா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com