மத்திய பிரதேசம்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போரட்டத்தில் கண்ணீா் புகை குண்டு வீச்சு

மத்திய பிரதேசத்தில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினா் போரட்டம் நடத்தி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டதையடுத்து போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனா்.

மத்திய பிரதேசத்தில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியினா் போரட்டம் நடத்தி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டதையடுத்து போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மத்திய அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவா் கமல்நாத் தலைமையில் சனிக்கிழமை ஒன்று திரண்ட அக்கட்சியின் தொண்டா்கள் ஆளுநா் மாளிகையான ராஜ் பவன் நோக்கி பேரணியாக சென்றனா். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று நிலைமை மோசமானதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும், தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தியும் ஆா்ப்பாட்டக்காரா்களை கலைத்தனா். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com