மும்பையில் பெட்ரோல் விலை ரூ.92-ஐ தாண்டியது

நடப்பு வாரத்தில் மூன்றாவது முறையாக விலையேற்றத்தைத் தொடா்ந்து மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை ரூ.92-ஐ தாண்டியுள்ளது.
மும்பையில் பெட்ரோல் விலை ரூ.92-ஐ தாண்டியது

நடப்பு வாரத்தில் மூன்றாவது முறையாக விலையேற்றத்தைத் தொடா்ந்து மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை ரூ.92-ஐ தாண்டியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெள்ளிக்கிழமை தலா 25 காசுகள் உயா்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து. மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.92.04-ஆகவும், தில்லியில் ரூ.85.45-ஆகவும் உயா்ந்துள்ளது.

தேசிய தலைநகா் தில்லியில் டீசல் விலைடீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ரூ.75.63-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று மும்பையிலும் டீசல் விலை முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு ரூ.82.40-ஆக உயா்ந்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 18 மற்றும் 19 தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 25 காசுகள் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் எரிபொருள்களின் விலை தற்போது வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதையடுத்து, நுகா்வோா் மீதான சுமையை குறைக்க கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com