விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: மகாராஷ்டிரத்தில் பேரணி

மகாராஷ்டிரத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: மகாராஷ்டிரத்தில் பேரணி

மகாராஷ்டிரத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையிலிருந்து நாசிக் பகுதி வரை நடைபெறும் இந்த பேரணியில் ஏராளமான விவசாயிகள் கையில் கொடியுடன் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 59-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் குடியரசு தினத்தில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

தில்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனா். 

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தில்லி நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்திந்திய கிஷான் சபாவின் சார்பில் மும்பையிலிருந்து நாசிக் பகுதி வரை பிரமாண்ட  பேரணி தொடங்கியுள்ளது.

தில்லியில் போராட்டத்தை நடத்தி வரும் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அழைப்பின் பெயரிலும் இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மும்பையில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியானது அசாத் திடலில் சென்று நிறைவடையும் என்றும், அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 25-ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று அறிக்கை அளிக்கப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி 26-ஆம் தேதி அசாத் திடலில் கொடியேற்றம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com