
குடியரசு தின விழா: தில்லி மெட்ரோ வாகன நிறுத்துமிடங்கள் மூடல் (கோப்புப்படம்)
தில்லி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் நாளை காலை 6 மணி முதல் மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை காலை 6 மணி முதல் 26-ம் தேதி பிற்பகல் 2 மணி வரை மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது. அதனையொட்டி அணிவகுப்புகள் நடத்தப்படவுள்ளதால், பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.