கரோனா: குணமடைந்தோர் விகிதம் 96.83 சதவீதமாக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் 96.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
கரோனா: குணமடைந்தோர் விகிதம் 96.83 சதவீதமாக உயர்வு

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் 96.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,849 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,54,533-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 15,948 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,16,786-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.83 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 155 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,339-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.44 சதவீதமாக குறைந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,84,408 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.73 சதவீதமாக குறைந்துள்ளது.

புதிதாக ஏற்பட்ட 155 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரம். கேரளம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,91,609 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நாட்டில் இதுவரை மொத்தம் 15,82,201 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 23-ஆம் தேதி வரை 27,10,85,220 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 8,27,005 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com