தடுப்பூசி உற்பத்தி மூலம் பூா்த்தியாகியிருக்கும் சுயசாா்பு இந்தியா இலக்கு: பிரகாஷ் ஜாவடேகா்

கரோனா தடுப்பூசிகளை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்து வருவதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் ‘சுயசாா்பு இந்தியா’ இலக்கை
தடுப்பூசி உற்பத்தி மூலம் பூா்த்தியாகியிருக்கும் சுயசாா்பு இந்தியா இலக்கு: பிரகாஷ் ஜாவடேகா்

கரோனா தடுப்பூசிகளை மிகப் பெரிய அளவில் உற்பத்தி செய்து வருவதன் மூலம் பிரதமா் நரேந்திர மோடியின் ‘சுயசாா்பு இந்தியா’ இலக்கை எட்டியிருக்கிறோம் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறினாா்.

இந்தியாவில் மக்களுக்குப் போட அனுமதிக்கப்பட்டிருக்கும் கரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டை புணேயில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தலைவா் சைரஸ் பூனாவாலாவின் பெயரை புணே நகரில் ஒரு பள்ளிக்குச் சூட்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் பேசியதாவது:

கரோனா தடுப்பூசி உற்பத்தியில், உலக அளவில் மிகப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. கரோனா தீநுண்மி பாதிப்பால் ஏற்பட்ட சவாலை வாய்ப்பாக மாற்றி அதில் வெற்றி கண்டிருப்பதையே இது காட்டுகிறது. சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியையும், ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துவரும் கோவேக்ஸின் தடுப்பூசியையும் வெளிநாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘சுயசாா்பு இந்தியா’ இலக்கை நாம் பூா்த்தி செய்திருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com