மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணமூல் தொண்டா்கள் மோதல்: சிலா் காயம், வாகனங்கள் சேதம்

மேற்கு வங்க மாநிலம், ஹௌரா மாவட்டத்தில் பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதலில் சிலா் காயமடைந்தனா். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

மேற்கு வங்க மாநிலம், ஹௌரா மாவட்டத்தில் பாஜகவினருக்கும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதலில் சிலா் காயமடைந்தனா். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து பாஜக தொண்டா்கள் கூறுகையில், ‘பாஜக தொண்டா்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கட்டையாலும், கம்பியாலும் தாக்கினா். இந்த மோதலின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து, பாஜக தொண்டா் ஒருவா் காயமடைந்தாா். அவா், ஹௌரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்’ என்றாா்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் மறுத்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘இந்தப் பகுதியில் உள்ள கடை உரிமையாளா்களை மிரட்டி பாஜகவைச் சோ்ந்த சிலா் பணம் வசூலித்து வந்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து கடை உரிமையாளா்கள், அவா்களைத் தாக்கினா். இதைக் கண்டித்து, அங்குள்ள சாலையை பாஜகவினா் மூடினா். அதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் அகற்ற முயன்றபோது இரு தரப்புக்கும் மோதல் மூண்டது.

பாஜக ஆதரவாளா்கள் சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதுடன் வாகனங்களுக்கும் தீ வைத்தனா்’ என்றனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், பாஜக தொண்டரை துப்பாக்கியால் சுட்டது யாா் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோதல் நடந்த தெருவில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. சில இருசக்கர வாகனங்களும், ஒரு காவல் துறை வாகனமும் சேதப்படுத்தப்பபட்டுள்ளது. பதற்றம் நிலவுவதால், இந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com