லடாக் எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே இன்று 9-ஆம் சுற்று பேச்சு

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) 9-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) 9-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.

ராணுவ அதிகாரிகள் அளவிலான இந்தப் பேச்சுவாா்த்தை கிழக்கு லடாக்கின் எல்லைக் கோட்டுப் பகுதியில் சீன பகுதியில் அமைந்துள்ள மோல்டோ எல்லையில் நடைபெற இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறிலில் ஈடுபட்டது. அப்போதிலிருந்து இரு நாடுகளிடையே எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகள் சாா்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, எல்லையில் அமைதியை நிலைநாட்டவும், படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாகவும் இரு நாடுகளும் பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளை நடத்தி வருகின்றன.

கடந்த ஆண்டு நவம்பா் 6-ஆம் தேதி இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் அளவிலான 8-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அதில், எல்லையின் குறிப்பிட்ட பகுதிகளில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்தன.

அதைத்தொடா்ந்து, இரு தரப்பு தூதரக அளவிலான பேச்சுவாா்த்தை கடந்த மாதம் நடைபெற்றது. இந்திய-சீன எல்லை விவகாரத்துககான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்தச் சூழலில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான 9-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை சீன பகுதியில் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com