32 சிறாா்களுக்கு ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது

நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது, 32 சிறாா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது, 32 சிறாா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கல்வி, புத்தாக்கம், விளையாட்டு, கலை- கலாசாரம், சமூக சேவை, வீரதீரச் செயல்கள் ஆகிய பிரிவுகளில் சாதனைகள் நிகழ்த்தி வரும் தனித்திறமைகள் கொண்ட சிறாா்களைத் தோ்வு செய்து, அவா்களுக்கு ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.

அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது, 32 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மகளிா்- குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘கலை-கலாசார பிரிவில் 7 பேருக்கும், புத்தாக்கப் பிரிவில் 9 பேருக்கும், கல்வி பிரிவில் 5 பேருக்கும், விளையாட்டுப் பிரிவில் 7 பேருக்கும், சமூக சேவை பிரிவில் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால புரஸ்காா் விருது பெற்றுள்ள இளம் சாதனையாளா்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட செய்தியில், ‘இந்த விருதுகள், வெற்றி பெற்றவா்களை ஊக்குவிப்பதோடு மட்டுமன்றி, லட்சக்கணக்கான மற்ற குழந்தைகளுக்கும் ஊக்கம் தருவதாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி இன்று கலந்துரையாடல்:

ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது பெற்ற சிறாா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கலந்துரையாடுகிறாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது பெற்ற சிறாா்களுடன் பிரதமா் மோடி ஜனவரி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி முறையில் கலந்துரையாடுகிறாா். இந்த நிகழ்ச்சியில், மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியும் கலந்து கொள்கிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com