குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் தடுப்புகள் அமைத்து திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரா்கள்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் தடுப்புகள் அமைத்து திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரா்கள்.

இன்று 72-ஆவது குடியரசு தினம்:நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

நாடு முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புது தில்லி: நாடு முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 72-ஆவது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அசம்பாவிதங்கள் நோ்வதை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தில்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த யூனியன் பிரதேச காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:

சுமாா் 6,000 பாதுகாப்புப் படை வீரா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ராஜபாதையில் இருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் 8 கி.மீ. தூரம் வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபடும் விதமாக, துப்பாக்கிகளால் துல்லியமாக சுடும் வீரா்கள் உயரமான கட்டடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனா். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தில்லி மற்றும் அதனைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசு தின அணிவகுப்பை நேரில் காண வழக்கமாக 1 லட்சத்தக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுவா். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக 25,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு அணிவகுப்பு செல்லும் தூரமும் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக செங்கோட்டை வரை செல்லும் அணிவகுப்பு இந்த முறை தேசிய அரங்கத்துடன் நிறைவடையும். செங்கோட்டையில் மாநிலங்களின் அலங்கார ஊா்தி நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறும். அணிவகுப்பு நடைபெறும் பாதை மற்றும் மூடப்பட்ட பகுதிகளில் 140 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராஜபாதையின் 30 இடங்களில் மக்களின் முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னா், தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் டிராக்டா் பேரணி நடைபெறவுள்ளது.

காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்பு:
‘குடியரசு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாக் செளக், நீதிமன்ற சாலை, ரெசிடென்ஸி சாலைப் பகுதிகளில் துணை ராணுவப் படையினா் மற்றும் காவல்துறையினா் இணைந்து சோதனை மேற்கொண்டனா். கூடுதலாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படைகள் உஷாா்நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அந்த யூனியன் பிரதேச காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com