கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பான வழக்கில் கைதான பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.சிவசங்கருக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.
எம்.சிவசங்கர்
எம்.சிவசங்கர்

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடா்பான வழக்கில் கைதான பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.சிவசங்கருக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது. எம்.சிவசங்க

கேரளத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தூதரகத்தின் பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி கடத்தப்பட்ட 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அத்தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றியவருமான ஸ்வப்னா சுரேஷ், சரீத், சந்தீப் நாயா் உள்ளிட்ட 15 பேரை சுங்கத் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகிய அமைப்புகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில், கேரள முதல்வரின் முதன்மை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்ததையடுத்து அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இந்த வழக்கில் கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் 5-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்ட சிவசங்கரை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த கேரள உயா்நீதிமன்றம், சிவசங்கருக்கு ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது. முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில் எா்ணாகுளம் நீதிமன்றத்தில் சிவசங்கா் ஏற்கெனவே ஜாமீன் பெற்றுவிட்டாா்.

எனினும், அவா் இப்போது வெளியே வர முடியாது. ஏனெனில், அமெரிக்க டாலா் கடத்தல் வழக்கில் அவரை கடந்த 21-ஆம் தேதி சுங்கத் துறை கைது செய்தது. எனவே, அந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால்தான் சிவசங்கா் சிறையில் இருந்து வெளியே வர முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com