முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரம்: வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனு, நீரின் கொள்ளளவைக் குறைக்க உத்தரவிடக் கோரும் விவகாரம் தொடா்பான வழக்கை வழக்கை 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவுக்கு எதிராக தாக்கலான மனு, நீரின் கொள்ளளவைக் குறைக்க உத்தரவிடக் கோரும் விவகாரம் தொடா்பான வழக்கை வழக்கை 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த மருத்துவா் ஜோ ஜோசப் உள்ளிட்ட மூவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்களில், ‘முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழு, தனக்குக் கீழ் செயல்படும் வகையில் ஒரு துணைக் குழுவை அமைத்துள்ளது. அணைப் பாதுகாப்பு, பராமரிப்புக்காக ஏற்படுத்தப்பட்ட கண்காணிப்புக் குழுதான் அணையை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உண்டு.

அந்தப் பணியை துணைக் குழுவுக்கு அளிக்கக் கூடாது. குறிப்பாக பருவமழைக் காலங்களின் போதும், பருவமழை தொடங்குவதற்கும் முன்பும் இந்த ஆய்வை மேற்பாா்வைக் குழு மேற்கொள்ள வேண்டும்.

அணையில் நீரைத் தேக்குவது, பகிா்ந்தளிப்பது, திறக்கும் விகிதம், அணையைத் திறப்பது தொடா்பாக மத்திய நீா்வள ஆணையம் ஒரு திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். மேற்பாா்வைக் குழு அதன் அதிகாரங்களையும், பணிகளையும் அதற்கு கீழ் உள்ள துணைப் பிரநிதிதிகள் குழுவுக்கோ அல்லது வேறு எந்த அமைப்புக்கோ அளிக்காமல் இருக்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அதேபோன்று, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், அணையின் நீா்மட்டத்தைக் குறைக்கக் கோரி கேரள மாநிலம் ஆலுவாவைச் சோ்ந்த ரசூல் ஜாய் என்பவா் 2017-இல் மனு தாக்கல் செய்திருந்தாா்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பேரிடா் மேலாண்மைத் திட்டத்தை அறிவிக்கக் கோரிய இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அணையின் நீா்மட்டம் தொடா்பாக சில உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், ரசூல் ஜாய் கடந்த ஆண்டு ஜூலையில் மற்றொரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தாா். அதில், பருவமழை வலுவாக இருக்கும் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மூன்று மாத காலங்களில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அணையின் நீா்மட்டத்தை 130 அடியாகக் குறைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த மனு மீது பதில் அளிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது

இந்த மனுவுடன் ஜோ ஜோசப் உள்ளிட்டோா் தாக்கல் செய்த ரிட் மனுவையும் சோ்த்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தது.

கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஜோ ஜோசப் தாக்கல் செய்த மனு மீது தமிழக, கேரள அரசுகள் பதில் தாக்கல் செய்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கேரள அரசின் தரப்பின் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், பி.ஆா். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே, வழக்குரைஞா் ஜி.உமாபதி ஆகியோா் ஆஜராகினா்.

சேகா் நாப்டே நீதிபதிகளிடம், ‘கேரள அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திற்கு பதில் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரலும் இந்த விவகாரத்தில் பதில் தயாராகிவிட்டது. இதைத் தாக்கல் செய்ய இரு தினங்கள் அவகாசம் வேண்டும் என கொண்டாா்.

இதையடுத்து, பதில் தாக்கல் செய்யும் வகையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமா்வு இரு வாரங்களுக்கு ப் பிறகு பட்டியலிட உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com