தில்லியில் பதற்றத்தை தணிக்க அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

தலைநகர் தில்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில்  நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டையில் விவசாயிகள்
தில்லி செங்கோட்டையில் விவசாயிகள்

புதுதில்லி: தலைநகர் தில்லியில் நிலவும் பதற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில்  நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்ற செவ்வாய்க்கிழமை விவசாயிகள் தில்லியில் பிரம்மாண்ட டிராக்டா் பேரணியை நடத்த முடிவெடுத்தனா். இதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்வதற்கு போலீஸாா் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தனா்.

இந்நிலையில், பேரணிக்கு வந்தவா்கள் அவா்களுக்கு அனுமதி அளித்திருந்த வழித்தடங்களை மீறி தில்லிக்குள் நுழைந்து செங்கோட்டை, ஐடிஓ , நாங்லோய் உள்ளிட்ட பல இடங்களில் முற்றுகையிட்டதால் போலீஸாருக்கும்-பேரணியில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போராட்டக்களமானது. 

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது இல்லத்தில் அவசரக்கூட்டத்தை கூட்டினார். மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, தில்லி காவல் ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் அரவிந்த் குமார், மற்றும் பல உள்துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமித் ஷா, பதற்றமான பகுதிகளில், அதிகளவில் ராணுவப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த அறிவுறுத்தினார். 

இந்நிலையில், தில்லியில் நிலவும் பதற்றத்‌தை கட்டுப்படுத்த நள்ளிரவு மு‌தல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, தில்லி மற்றும் உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்‌ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சே‌வை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறைக்கு உதவுவதற்காக, 16 துணை ராணுவப்படை தொகுதிகளை உடனடியாக தில்லிக்கு அனுப்ப மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். இதில் 15 மத்திய துணை ராணுவப் படைகள் தில்லியிலும் பதற்றம் மிகுந்த பகுதிகளிலும், மற்றோரு படையை தயார் நிலையிலும் வைத்திருக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனிடையே முற்றுகை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே என போராட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com