கொல்கத்தாவில் முதன்முறையாகப் படகு நூலகம்

கொல்கத்தாவில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு முதன்முறையாகப் படகில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளது.
கொல்கத்தாவில் முதன்முறையாகப் படகு நூலகம்

கொல்கத்தாவில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு முதன்முறையாகப் படகில் குழந்தைகளுக்கான நூலகம் ஒன்றை தொடங்கியுள்ளது. இது பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

மேற்குவங்க போக்குவரத்துக் கழகம், இங்குள்ள பாரம்பரிய புத்தகக் கடைகளுடன் இணைந்து படகில் இளம் வாசகர்களுக்கான நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் முதன்முதலாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அந்த அதிகாரி கூறுகையில், 

கொல்கத்தாவின் அழகைப் பாராட்டும் வகையில், ஹூக்லி ஆற்றில் பயணம் செய்யும் குழந்தைகள் மற்றும் இளம் வாசகர்களை கவரும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு நூலகமானது மூன்று மணி நேர நீண்ட பயணத்திற்கு மக்களை அழைத்துச் செல்லும். 

படகு நூலகத்தில் பயணம் செய்யும் இளம் வாசகர்கள் ஆங்கிலம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து படிக்கலாம்.

படகு பயணமானது மில்லினியம் பூங்காவில் தொடங்கி, பெலூர் மத் ஜெட்டிக்குச் சென்று திரும்பும். வாரத்தில் அனைத்து நாள்களிலும், நாளொன்றுக்கு மூன்று முறை படகு பயணம் இயக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். 

மேலும், படகில் இலவச வைஃபை வசதியும் உள்ளது. படகில் பயணம் செய்யக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு ரூ.100-ம், குழந்தைகளுக்கு ரூ.50-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

படகு நூலகத்தில் கதை வாசிப்பு, நாடக புத்தகங்கள், கவிதை, புத்தக வெளியீடுகள், இசை மற்றும் பலவற்றை உள்ளடகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com