கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை  தொடங்குகிறது. கூட்டத்தின் முதல் நாளில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் வஜுபாய்வாலா உரையாற்றுகிறார்.


பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை  தொடங்குகிறது. கூட்டத்தின் முதல் நாளில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் வஜுபாய்வாலா உரையாற்றுகிறார்.
இதுகுறித்து பெங்களூரு, விதானசெüதாவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி கூறியதாவது:
15}ஆவது சட்டப்பேரவையின் 9}ஆவது கூட்டத்தொடர் ஜன. 28ஆம் தேதி முதல் பிப்.5}ஆம்தேதி வரை நடைபெற இருக்கிறது. பெங்களூரு, விதானசெüதாவில் ஜனவரி 28}ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் வஜுபாய்வாலா உரையாற்றுகிறார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஆளுநர் வஜுபாய்வாலாவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறோம். அவரும் பங்கேற்றுப் பேச சம்மதம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் உரைக்குப் பிறகு மறைந்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கியப் பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
ஜன.29}ஆம்தேதி முதல் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படும். 
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் நீங்களாக மொத்தம் 7 நாள்கள் நடைபெற இருக்கிறது. 6 நாள்களுக்கு கேள்விநேரம் இடம்பெறும். கூட்டத்தொடரில் "ஒரே நாடு}ஒரே தேர்தல்' குறித்தும் விவாதம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தொடரில் 11 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. சட்டப்பேரவைக் கூட்டத்தைக் காண பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பேரவைக் கூட்டத்தின்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பணி நியமனம் மற்றும் பிறவற்றின் இட ஒதுக்கீடு) திருத்தச் சட்ட முன்வடிவு}2020, கர்நாடக அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்ட முன்வடிவு}2020 உள்பட 6 சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன. கேள்வி நேரத்தின்போது 1,309 கேள்விகள், 47 கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும் என்றார். பேட்டியின்போது பேரவைச் செயலாளர் விசாலாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com