8 நாள்களில் மட்டும்.. காணாமல் போன 894 குழந்தைகள் ஒடிசாவில் மீட்பு
8 நாள்களில் மட்டும்.. காணாமல் போன 894 குழந்தைகள் ஒடிசாவில் மீட்பு

8 நாள்களில் மட்டும்.. காணாமல் போன 894 குழந்தைகள் ஒடிசாவில் மீட்பு

காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய ஒடிசா காவல்துறையினர், கடந்த 8 நாள்களில் மட்டும் 894 குழந்தைகளை மீட்டுள்ளதாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி அபே தெரிவித்துள்ளார்.


கட்டக்: காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்திய ஒடிசா காவல்துறையினர், கடந்த 8 நாள்களில் மட்டும் 894 குழந்தைகளை மீட்டுள்ளதாக ஒடிசா மாநில காவல்துறை டிஜிபி அபே தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அபே, ஜனவரி 18-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை, காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் சிறப்பு அதிரடித் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த அதிரடித் திட்டத்தின் கீழ் சுமார் 894 குழந்தைகள் இந்த மாநிலத்தில் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்த இந்த திட்டத்தை செயல்படுத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மீட்கப்பட்ட 894 குந்தைகளில் 800 பேர் சிறுமிகள் என்றும் 94 பேர் சிறுவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் குழந்தைகளைக் காணவில்லை என்று 834 புகார்கள் வந்திருப்பதையடுத்து, காணாமல் போன குழந்தைகளை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. காணாமல் போன குழந்தைகளை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு டிஜிபி அபே தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com