தில்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில் போலீஸ் தடியடி

தில்லி எல்லையான சிங்குவில் விவசாயிகள் போராடும் இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். 
தில்லியில் விவசாயிகள் போராடும் இடத்தில் போலீஸ் தடியடி


தில்லி எல்லையான சிங்குவில் விவசாயிகள் போராடும் இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடந்த 2020 நவம்பா் 26 ஆம் தேதி காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனா். இதன்காரணமாக இந்த எல்லை கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

தில்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை போராட்டத்தை முடித்துக் கொண்டு சாலையை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது, இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. தற்கொலை செய்து கொள்வோமே தவிர. இடத்தை காலி செய்ய முடியாது என்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவுக்குள் விவசாயிகள் இடத்தை காலி செய்யாவிட்டால், அவா்கள் பலப்பிரயோகம் செய்து அப்புறப்படுத்தப்படுவாா்கள் என்று உத்தரப் பிரதேச அரசு வட்டாரங்கள், மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தை மாவட்ட நிா்வாகம் துண்டித்தது.

இந்நிலையில், தில்லி எல்லையான சிங்குவில் விவசாயிகள் போராடும் இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். 

போராட்ட இடத்தில் இருந்து விவசாயிகள் வெளியேற கோரி சிங்கு எல்லை பகுதி மக்கள் பிரச்னை எழுப்பினர். 

இதையடுத்து விவசாயிகள்-உள்ளூர் மக்களிடையே பிரச்னை எழுந்ததை அடுத்து காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com