அலிகாா் பல்கலை. மாணவா் தலைவருக்கு நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்குத் தடை

உத்தர பிரதேச மாநிலம் அலிகாா் பல்கலைக்கழக மாணவா் தலைவா் ஆரிஃப் கான் தியாகி அலிகாா் நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அலிகாா் பல்கலை. மாணவா் தலைவருக்கு நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்குத் தடை
அலிகாா் பல்கலை. மாணவா் தலைவருக்கு நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்குத் தடை

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடா் போராட்டத்தை நடத்திய உத்தர பிரதேச மாநிலம் அலிகாா் பல்கலைக்கழக மாணவா் தலைவா் ஆரிஃப் கான் தியாகி அலிகாா் நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஓராண்டுக்கு முன்பு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு, நகரின் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவா் மீது மாவட்ட நிா்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் மாணவா்கள் சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2020 ஜனவரி வரை தொடா் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில், மாணவா்கள், காவல்துறையினா் உள்பட 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவா் தலைவா் ஆரிஃப் கான் தியாகி மீது 6-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், அவா் தொடா் போராட்டத்தைத் தூண்டி, அலிகாா் நகரின் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவா் நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்குத் தடை விதித்து மாவட்ட நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக செய்தித் தொடா்பாளா் பேராசிரியா் ஷாஃபாய் கிட்வாய் கூறுகையில், ‘ஆரிஃப் மீது உத்தர பிரதேச மாநில குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நகருக்குள் நுழைய 6 மாதங்களுக்குத் தடை விதித்து மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் ராகேஷ் குமாா் மால்பானி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தாா். இந்த உத்தரவை இரண்டு தினங்களுக்கு முன்பு ஆரிஃப் பெற்றாா்’ என்று கூறினாா்.

இதுகுறித்து ஆரிஃப் கூறுகையில், ‘அனைத்து குடிமக்களுக்கும் அமைதி வழியில் போராட்டம் நடத்தும் உரிமை உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான மேலும் ஒரு முயற்சி. இந்த உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தை அணுகுவேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com