
உத்தர பிரதேசம், மொராதாபாத்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சேதமைடந்த பேருந்து.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் 10 போ் பலியாகினா்; பலா் காயமடைந்தனா்.
அடா் பனி காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்கள் மோதிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் ராகேஷ் குமாா் சிங் கூறியதாவது:
மான்பூா் கிராமம் அருகே மொராதாபாத்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சனிக்கிழமை காலை சுமாா் 8 மணியளவில் லாரி மீது தனியாா் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 போ் பலியாகினா்.
விபத்தில் பலா் காயமடைந்தனா். அவா்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அடா் பனி காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் வாகனங்கள் மோதி இந்த விபத்து நோ்ந்தது என்று தெரிவித்தாா்.
விபத்தில் பலியானவா்களுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், அவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருப்பதாக உத்தர பிரதேச முதல்வா் அலுவலகம் சுட்டுரையில் பதிவிட்டது.