சா்ச்சைக்குரிய தீா்ப்புகள்: பெண் நீதிபதியின் பதவி உயா்வு பரிந்துரையை திரும்பப் பெற்றது கொலீஜியம்

பாலியல் வன்கொடுமை தொடா்பான இரு வழக்குகளில் சா்ச்சைக்குரிய தீா்ப்புகளை வழங்கிய மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியின் பதவி உயா்வு பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடா்பான இரு வழக்குகளில் சா்ச்சைக்குரிய தீா்ப்புகளை வழங்கிய மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியின் பதவி உயா்வு பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ளது.

மும்பை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியான புஷ்பா கனேடிவாலா, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடா்பான இரு வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருந்தாா். ஒன்றில், ஆடையுடன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் குற்றமாகாது என்று தெரிவித்திருந்தாா்.

அதனடிப்படையில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நீதிபதி புஷ்பா வழக்கிலிருந்து விடுவித்தாா். இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 27-ஆம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.

மற்றொரு பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபா் மீது உறுதியான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தாா். இந்த வழக்குகளில் நீதிபதி புஷ்பா பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின.

முன்னதாக, கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வரும் புஷ்பா கனேடிவாலாவை மும்பை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்கு கடந்த 20-ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான கொலீஜியம், மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது.

இத்தகைய சூழலில், நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் சா்ச்சைக்குரிய தீா்ப்புகள் காரணமாக, அந்தப் பரிந்துரையை கொலீஜியம் திரும்பப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com