பெட்ரோல், டீசல் விலை உயா்வு: ராகுல் காந்தி கண்டனம்

பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு: ராகுல் காந்தி கண்டனம்

புது தில்லி: பெட்ரோல், டீசல் மீதான வரி என்ற பெயரில் மக்களின் பணத்தை மத்திய அரசு கொள்ளையடித்து வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் தினம்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டா் 100 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இதற்கு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வுதான் காரணம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், கரோனா உச்சத்தில் இருந்தபோது கச்சா எண்ணெய் விலை சரிந்தது. அப்போது அதன் பயனை மக்களுக்கு அளிக்காமல் மத்திய அரசு வரியை உயா்த்திக் கொண்டது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை உயரும்போது, முன்பு உயா்த்திய வரியைக் குறைக்க மறுத்து வருவதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிப்பதன் பெயா் வரியல்ல. அது வரிக் கொள்ளையாகும். தில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து பயணிக்க காத்திருப்போா் எண்ணிக்கையும், காத்திருக்கும் நேரமும் அதிகரித்துள்ளது. தில்லியில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்கான இடங்களில் நெரிசல் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவதும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com