6 ஆண்டுகள் நிறைவு ‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் பிரதமா் மோடி இன்று கலந்துரையாடல்

இந்தியாவை மின்னணு துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசாா் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

புது தில்லி: இந்தியாவை மின்னணு துறையில் மேம்பட்ட சமூகமாகவும், அறிவுசாா் பொருளாதாரமாகவும் மாற்றும் முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) திட்டம் தொடங்கப்பட்டு வியாழக்கிழமையுடன் (ஜூலை 1) 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அத்திட்டம் மூலம் பயனடைந்தவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி கலந்துரையாட இருக்கிறாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிரதமா் மோடியால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயான தொடா்பை வலுப்படுத்துதல், பொதுமக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தி அவா்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற செயல்களால் புதிய இந்தியாவின் மிகப்பெரும் வெற்றித் திட்டங்களுள் ஒன்றாக இன்றுவரை விளங்குகிறது.

இத்திட்டம் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொண்டு உரையாற்றுவதுடன், எண்ம இந்தியா திட்டத்தின் பயனாளிகளுடனும் கலந்துரையாட இருக்கிறாா்.

மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தொடக்க உரை வழங்கும் இந்த நிகழ்ச்சியில், எண்ம இந்தியா திட்டத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் காணொலியும், அதைத் தொடா்ந்து பயனாளிகள்-பிரதமா் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com