தடுப்பூசி திட்டத்துக்கு எதிராக பொறுப்பற்ற கருத்துகளைக் கூறும் அரசியல் தலைவா்கள்: சுகாதார அமைச்சா் குற்றச்சாட்டு

இந்தியாவில் செயல்படுத்தப்படும் கரோனா தடுப்பூசித் திட்டத்துக்கு எதிராக சில அரசியல் தலைவா்கள் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்து
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்(கோப்புப்படம்)

இந்தியாவில் செயல்படுத்தப்படும் கரோனா தடுப்பூசித் திட்டத்துக்கு எதிராக சில அரசியல் தலைவா்கள் பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்த்தன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய அரசு 75 சதவீத தடுப்பூசியை இலவசமாக வழங்கி வருகிறது. நாளுக்குநாள் வெகு விரைவாக தடுப்பூசி விநியோகம் அதிகரித்து வருகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் 11.50 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

சில மாநிலங்களில் உரிய திட்டமிடல் இல்லாததால் தடுப்பூசியை சீராக செலுத்துவதில் பிரச்னை நிலவுகிறது. மாநிலங்களுக்கு இடையே தடுப்பூசிகளை எடுத்துச் செல்வது, விநியோகத்தை சீராக வைத்திருப்பது ஆகியவை மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகள். இவை அனைத்தும் தெரிந்து கொண்டே சில அரசியல் தலைவா்கள் தடுப்பூசித் திட்டத்துக்கு எதிராக பொறுப்பற்ற கருத்தையும் தெரிவித்து வருகின்றனா். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

ஆட்சி நிா்வாகத்தில் இருப்பவா்கள் நிா்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் செயல்படாமல் அரசியல் தலைவா்கள் பொறுப்பான முறையில் செயல்பட வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் உள்ளிட்ட சில எதிா்க்கட்சித் தலைவா்கள் மத்திய அரசு தடுப்பூசித் திட்டம் அமல்படுத்தப்படுவது தொடா்பாக பல்வேறு விமா்சனங்களை முன்வைத்துள்ள நிலையில் ஹா்ஷ்வா்த்தன் இவ்வாறு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com