கரோனா: இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்தது உயிரிழப்பு

இந்தியாவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 853 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,00,312 -ஆக அதிகரித்துள்ளது.
கரோனா: இந்தியாவில் 4 லட்சத்தைக் கடந்தது உயிரிழப்பு


இந்தியாவில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 853 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,00,312 -ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 46,617 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,04,58,251-ஆக உயா்ந்துள்ளது. எனினும், தொடா்ந்து ஐந்தாவது நாளாக தினசரி புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 34 கோடியைக் கடந்தது.

நம் நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  5,09,637 ஆகக் குறைந்துள்ளது. 

தொடா்ந்து 50-ஆவது நாளாக, புதிய பாதிப்புகளைவிட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 59,384 போ் குணமடைந்தனா். இதுவரை மொத்தம் 2,95,48,302 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,42,51,520 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வியாழக்கிழமை மட்டும் 18,80,026 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com